இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் அதளபாதாளத்தில் ஜிடிபி!

gdp

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பிற நாட்டு நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து குறைந்துவருகிறது.

வேலை இழப்பு புள்ளி விவரங்கள் கவலை தரும் வகையில் அதிகரித்துள்ளது இதுவே டாலரை பலவீனப்படுத்தியுள்ளது.

gdp

உலகளவில் மிகப்பெரிய பொருளாதாரங்களை கொண்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட முடக்கநிலையால் இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்தது. இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்காவிலும் இந்த உள்நாட்டு மொத்த உற்பத்தி கணிசமாக சரிந்துள்ளது.

ஓ.இ.சி.டி என்று பரவலாக அறியப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முன்னேற்றத்துக்கான கூட்டமைப்பின் தரவுகளின்படி அமெரிக்காவில், நடப்பு ஆண்டின் ஏப்ரல் – ஜூன் வரையிலான காலாண்டில் பொருளாதாரம் -9.1 சதவீதம் சுருங்கியுள்ளது.

இதேபோல் கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்ட ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் உள்நாட்டு மொத்த உற்பத்தி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதையும் படிக்கலாமே: செப்.6 ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தில் முத்தமிழ் விழா!

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa