அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாகும் இந்தியர்!

Amul Thapar

இந்திய அமெரிக்கரான அமுல் தாபர் அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதி பதவிக்கு இந்தியர் அமுல் தாபரிடம் அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் நேர்முக தேர்வு நடத்தினார்.

உச்சநீதிமன்ற நீதிபதி, கென்னடி வரும் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து அப்பதவிக்காக 25 பேரின் பெயர்களை ட்ரம்ப் பரிசீலனை செய்தார். அவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீதிபதி அமுல் தாபரும் ஒருவர். இந்த நிலையில், அமுல் தாபர் உள்ளிட்ட 4 பேரிடம் ட்ரம்ப் நேர்முகத் தேர்வு நடத்தினார்.

Amul Thapar

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி, கின்ஸ்பர்க் உயிரிழந்த நிலையில் அவரது இடத்தை நிரப்பும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக அதிபர் ட்ரம்ப், 20 பேரின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளார். அதில் இந்திய அமெரிக்கரான அமுல் தாபரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய ராஜ் தாபர்‌ – வீணா பல்லாவின் மகனான அமுல் தாபர் 1969 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி பிறந்தவர். இவர் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக தற்போது பதவி வகிக்கிறார். அமுல் தாபருக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி தலைவர் மிட்ச் மெக்கன்னல் ஆதரவு தெரிவித்து உள்ளார். கடந்த ஆண்டு அமுல் தாபரை 6-வது அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக அதிபர் ட்ரம்ப் நியமனம் செய்தார் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிக்கலாமே: அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைய வாய்ப்பு! ஜோ பிடனுக்கு 49.6% பேர் ஆதரவு

FB Page

– https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
– https://twitter.com/tamilmicsetusa