ஆஸ்டின் தமிழ் சங்கம் சார்பில் களைகட்டிய தீபாவளி விழா!

Austin Tamil sangam

வருகிற நவம்பர் மாதம் 14-ம் தேதி தீபாவளி வருகிறது. தீபாவளி என்றாலே புத்தாடையும், பட்டாசும்தான்…அடுத்தபடியாக பலகரம்…

இதனையடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இடம் பிடித்துக் கொள்ளும். இதில் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், குழந்தைகளுடன் பாட்டாசு வெடித்து கொண்டாடுவதுதான் அனைவருடைய நெஞ்சிலும் நீங்கா இடம் பிடிக்கும்.

அந்த வகையில் இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகிவருகின்றனர்.

Image may contain: text that says 'ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் கெர்வ் Nov 7h, Saturday 2020 Live Programs @ htt:/ceranmX பிரபல தொகுப்பாளர் தொகுத்து வழங்கும் அழகு குழந்தைகளின் பாடல்களுடன்! திரு. ஞானசம்பந்தன் அவர்களின் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் பிரபல பாடகர் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி!! பிரபலங்களின் மனவலிமை பற்றியப் பேச்சு! ஆஸ்டின் டெக்சாஸ் மாகாணத்தின் சிறந்த திறமையானவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகள்!!! அனைவருக்கும் ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் சார்பாக தீபாவளி இனிய நல்வாழ்த்துக்கள்'

கொரோனா பரவலால் இந்த ஆண்டு தீபாவளி அவ்வளவாக களைகட்டவில்லை என்றே சொல்லலாம்.

இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் சார்பில் தீபாவளி விழா காணொலி வாயிலாக கொண்டாடப்பட்டது.

ஆஸ்டின் நகரில் நடந்த இந்தக் கொண்ட்டாத்தில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளுடன் இடம் பெற்றிருந்தன.

இந்த விழாவில் சங்கத்தின்  நிர்வாகிகள் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் தலைமையில் பட்டிமன்றமும், தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் தலைமையில் கீழடி நினைவுகள் என்ற தலைப்பில் சிறப்புரையும் நடந்தது.

இந்த நிகழ்ச்சிகளில் ஆஸ்டின் வாழ் தமிழர்கள மட்டுமின்றி பலரும் பங்கேற்றனர்.

இதையும் படிக்கலாமே: ப்ளீஸ் தோல்வியை ஒத்துக்கொங்க! ட்ரம்பிடம் கெஞ்சும் அவர் மருமகன்…

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter