இந்தியாவுக்கு போனவங்க திரும்பி வந்துடுங்க…

Joe Biden

இந்தியாவிலிருந்து அமெரிக்கா திரும்ப விரும்பும் மக்கள் உடனடியாக கிடைக்கக்கூடிய போக்குவரத்தை பயன்படுத்தி கொள்ளவும் என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

 

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.

நாள் ஒன்றுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.

இதனால், பிரிட்டன், ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகள், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளன.

Us flag

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிரித்துகொண்டே வருவது மட்டுமின்றி, மருத்துவ வசதி இல்லாமல் அந்நாடே தவித்துவருகின்றன.

மருத்துவ சேவைகளை வழங்குவதில் இந்தியாவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியேறுவது பாதுகாப்பானது.

நாடு திரும்ப விரும்பும் அமெரிக்க குடிமக்கள், இப்போது கிடைக்கக்கூடிய வணிக போக்குவரத்துகளை பயன்படுத்தி கொண்டு நாடு திரும்புங்கள். அமெரிக்காவுக்கு தினமும் நேரடியாக விமானங்களும், பாரீஸ் மற்றும் பிராங்பர்ட் வழியாக இணைப்பு விமானங்களும் உள்ளன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.