செப்.6 ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தில் முத்தமிழ் விழா!

Tamil Manram Poster

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதி தமிழ் மன்றத்தின் முத்தமிழ் விழா செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 6, 2020 அன்று மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி (PDT) வரை, முத்தமிழை முத்தாய்ப்பாய் போற்ற, இயல் தமிழில் புலவர் இராமலிங்கம் ஐயா தலைமையில், புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் பார்வையில்,
காதல் பார்வை,கவிதை பார்வை, குடும்ப பார்வை, கோப பார்வை, தமிழ் பார்வை என்ற தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

Poster

இதுமட்டுமின்றி இசைத்தமிழில் நம் பாரம்பரிய இசையின் சுவை பருக, வளைகுடாப்பகுதி பாரம்பரிய இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும், நாடகத்தமிழில் களரி தொல்கலைகள் & கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வழங்கும் கோவலன் படுகளம் மரப்பாவை கூத்தும் காண வாருங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முத்தமிழ் விழாவை நேரில் மட்டுமின்றி இணையவழியிலும் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது Link To Join: https://tinyurl.com/sfbatmmtv என்ற வலைதளத்தின் மூலம் காணலாம்.

மரப்பாவைக்கூத்து என்ற பெயரில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி அமெரிக்க நேரப்படி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், இந்திய நேரப்படி செப். 7 ஆம் தேதி காலை 5.30 மணி முதல் 10.30 மை வரையிலும் நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்காவில் வசிக்கும் ஏராளமான தமிழ் அறிஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.

கண்டங்கள் தாண்டினாலும், தமிழால் இணைந்த இந்த உள்ளங்கள், தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் மறக்காமல் அதனை வளர்த்துவருவது போற்றுதலுக்கு உரியது.

இதையும் படிக்கலாமே: மிஸ்டர்… ரொம்ப பேசாதீங்க… உங்க வேலையை நீங்க பாருங்கள்! ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த மேயர்

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa