அதிபர் தேர்தல்: 2.20 கோடி வாக்காளர்கள் தபால் மூலம் வாக்குப்பதிவு

US presidential elections

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே இருக்கும் நிலையில் இதுவரை 2.20 கோடி மக்கள் தபால் மூலம் வாக்களித்துள்ளனர்.

உலகமே ஆர்வமுடன் உற்றுநோக்கும் அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் தேர்தல் பரப்புரைகளும் முன்னேற்பாடுகளும் தடைபடவில்லை.

அமெரிக்கா அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளருமான ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் இடையே காணொலி முறையில் இரண்டாம் கட்ட நேரடி விவாதம் நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் ட்ரம்ப் இதனை ஏற்க மறுத்ததால், வாக்காளர்களுடன் உரையாடும் நிகழ்ச்சியாக இது மாற்றப்பட்டது.

US presidential elections

மியாமியில் அதிபர் ட்ரம்பும், பிலடெல்பியாவில் ஜோ பைடனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி வாயிலாக வாக்காளர்களின் கேள்விகளை எதிர்கொண்டனர்.

வாக்காளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்த ட்ரம்ப், தேர்தலில் தோல்வி அடைந்தால், சுமூகமான முறையில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என முதன்முறையாக தெரிவித்தார்.

எனினும் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் எனக் கூறினார். பிலடெல்பியாவில் வாக்காளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ஜோ பைடன், கொரோனா பெருந்தொற்று விவகாரத்தில் ட்ரம்ப் நிர்வாகம் பெரிய தோல்வி அடைந்துவிட்டதாக சாடினார்.

தேர்தலுக்கு 15 நாட்களே இருக்கும் நிலையில் வரும் 22ஆம் தேதி இருவருக்கும் இடையே மூன்றாம் கட்ட நேரடி விவாதம் நடைபெற வேண்டும். அது எந்த முறையில் நடைபெறும் என்பது இதுவரை தெரியவரவில்லை. தேர்தலை பொறுத்தவரை, ஏற்கனவே 2 கோடியே 20 லட்சம் வாக்காளர்கள் தபால் வாக்கு மூலம் தங்களின் வாக்கினை பதிவு செய்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று அச்சத்தால் தபால் மூலம் வாக்களிக்க பலர் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இதில் பல முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக ட்ரம்ப் கூறிவருகிறார்.

இதையும் படிக்கலாமே:  சர்ச்சில் பாதிரியாரிடம் ஆசி பெற்ற ட்ரம்ப்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter