பைசர் தடுப்பூசி போட்டவர்களுக்கு அலர்ஜி

Vaccine

அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர்களுக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் பைசர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இருவருக்கு அலர்ஜி
ஏற்பட்டதை அடுத்து, உணவு மற்றும் மருந்துகளால் அலர்ஜி ஏற்படுபவர்கள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியது.

இந்நிலையில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தை சேர்ந்த சுகாதார பணியாளர்கள் இருவருக்கு, பைசர் தடுப்பூசியை போட்டுக்கொண்ட பின் தீவிர அலர்ஜி பிரச்னையால் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து அவர்கள் நலமாக இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

pfizer vaccine

தடுப்பூசி போட்ட 10 நிமிடங்களில் முகம் மற்றும் உடலில் எரிச்சல், கண்களில் வீக்கம், தலைச்சுற்றல், மூச்சுவிடுதலில் சிரமம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.

ஃபெடெக்ஸ் மற்றும் யுபிஎஸ் நிறுவனங்கள் நாட்டிலுள்ள ஒவ்வொரு மாகாணத்துக்கும் கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பிவருகின்றன.

இதனிடையே அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த வார இறுதிக்குள் ஃபைசர் நிறுவனத்திடம் இருந்து 2.9 மில்லியன் தடுப்பூசிகளைப் பெற இலக்கு கொண்டுள்ளது.

இன்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சும் அவரின் மனைவி கேரனும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் புதிய அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஜோ பைடனும் அடுத்த வாரம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவுள்ளார்.

பைசர் தடுப்பூசி மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் அதிகரிக்க செய்வதற்காகவே பைடப் தடுப்பூசி போட்டுக் கொள்ளவிருப்பதாக ஆட்சி மாற்றத்திற்காக அமைக்கப்பட்ட குழுவினர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறார் பைடன்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter