ஒவ்வொரு 33 வினாடிக்கும் ஒருவர் உயிரிழப்பு!

Patient

அமெரிக்காவில் ஒவ்வொரு 33 வினாடிகளுக்கும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

Coronavirus
Image: AFP

இதுகுறித்து அங்குள்ள தனியார் மருத்துவமனை நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் , “அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இது முந்தைய வாரத்தை விட 6.7 சதவீதம் அதிகம். கடந்த 18 ஆம் தேதி அதிகபட்சமாக ஒரே நாளில் 2, லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒவ்வொரு 33 வினாடிக்கும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கடந்த 7 நாட்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலிபோர்னியா மற்றும் ரோடே தீவிலே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளது.

மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 31 மாகாணங்களில் கொரோனா பரிசோதனை டெஸ்ட் பாசிட்டிவ் ரேட் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதையும் படிக்கலாமே: வெள்ளை மாளிகையை மிளிர வைக்கும் கிறிஸ்துமஸ்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter