அமெரிக்காவில் 31.4கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டது!

vaccine

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்றுவருவதால் அங்கு கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த ஆண்சு தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைடன், மைக் பென்ஸ் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

One Dose Vaccine

இதன்மூலம் மக்களுக்கு தடுப்பூசி மீதான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. முன்களப்பணியாளர்கள் மட்டுமின்றி அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.

தான் பதவியேற்ற 100 நாட்களுக்குள் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிபா் ஜோ பைடன் உறுதி அளித்திருந்தார்.

அதன்படி அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 31 கோடியே 29 லட்சத்து 15 ஆயிரத்து 170 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

அவற்றில் 17 கோடியே 58 லட்சத்து 67 ஆயிரத்து 860பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.

14 கோடியே 77 லட்சத்து 58ஆயிரத்து 585 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.