கொரோனாவால் பெற்றோரை இழந்த 43,000 குழந்தைகள்

baby

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

Baby

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று அமெரிக்கா.

இதனிடையே அமெரிக்கா கொரோனா தடுப்பூசி அதிதீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பரவல் தொடங்கிய நாள் முதல் கடந்த பிப்ரவரி மாதம் 43,000 குழந்தைகள் தங்கள் பெற்றோர்களில் ஒருவரை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இழப்பானது உண்மையில் குழந்தைகளுக்கு, அவர்களது குடும்பத்தினருக்கு பெரும் துன்பத்தையும் உளவியல் ரீதியான பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலான குழந்தைகள் இதுபோன்ற திடீர் இழப்புகளை தனிமையாக எதிர்கொள்வதாக கூறும் ஆய்வாளர்கள், பல குடும்பங்கள் பொருளாதார நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் 20 சதவீத கருப்பின குழந்தைகள் தங்களது பெற்றோரை கொரோனாவால் இழந்துள்ளனர்.