“சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா”அமெரிக்கவாழ் இந்தியர்கள் குறித்த விசித்திர ஆய்வு

Indian Americans

என்னதான் அமெரிக்காவில் செட்டில் ஆனாலும் இந்திய பிரச்னைகள் மீது அமெரிக்கவாழ் இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டுவது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்க மக்கள் தொகையில், ஒரு சதவீதத்துக்கு மேல், இந்தியர்கள் வசிக்கின்றனர். வாக்காளர்களில், ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இந்தியா வம்சாவைளியினர் உள்ளனர்.

அவ்வளவு ஏன் பைடன் நிர்வாகத்திலும் ஏராளமான இந்திய வம்சாவளிகள் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் செயல்பாடுகள் குறித்து பென்சில்வேனியா பல்கலை உட்பட மூன்று நிறுவனங்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டன.

File photo | An attendee wears a mask of Indian Prime Minister Narendra Modi at the 'Howdy, Modi!' event in Houston, Texas | Photo: Scott Dalton | Bloomberg

அதில் வெளியான முடிவுகள் அடிப்படையில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அதிக ஆர்வம் காட்டுவதும், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு, குடியேற்ற பிரச்னை உட்பட பல விவகாரங்களில் இந்தியர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படக்கூடாது என நினைப்பதும் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி அமெரிக்க இந்தியர்களில் பெரும்பாலானோர் பாஜகவின் ஆதரவாளர்களாகவே உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

அதனால் தான் இந்தியாவில்கொண்டு வரப்பட்ட, குடியுரிமை திருத்த சட்ட மசோதா, குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு பெருமளவு கிடைத்திருப்பது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெரும்பாலான அமெரிக்க வாழ் இந்தியர்கள், பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களுக்கு பச்சைக்கொடி காட்டுகின்றனர்.