இந்திய மக்களை காக்கும் அமெரிக்கா!

remdesivir

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியை நெருங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனாபரவல் பாதிப்பால் படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் மற்றும் மருந்து பற்றாக்குறை நிலவிவருகிறது.

இதனால் இந்தியாவே நிலைகுலைந்து போய் உள்ளது. பல்வேறு உலக நாடுகளும் கொரோனாவுக்கு ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்களை வழங்கி உதவி செய்து வருகின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவி செய்துவருகிறது.

அந்த வகையில் அமெரிக்கா, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் 78,595 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளை விமானம் மூலம் மும்பை விமான நிலையத்திற்கு அனுப்பிவைத்தது.

The world needs pharmaceuticals from China and India to beat coronavirus

முன்னதாக அமெரிக்காவில் இருந்து கடந்த 5 ஆம் தேதி 81,000 ரெம்டெசிவிர் மருந்துகளும், மே 8 ஆம் தேதி 25,600 ரெம்டெசிவிர் மருந்துகளும் இந்தியாவுக்கு வந்தன.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று மற்றும் இறப்புகள் அதிகரித்து வருவது இதயத்தை நொறுக்குவதாக உள்ளதாகவும், அமெரிக்கா தொற்றால் அவதிபட்ட காலத்தில் இந்தியா உதவியது.

தற்போது இந்தியாவின் நண்பன் என்ற முறையில் அமெரிக்கா உதவிகளை செய்து வருகிறது என்றும் இந்திய வம்சாவளியும் அமெரிக்க துணை அதிபருமான கமலாஹாரிஸ் தெரிவித்திருந்தார்.