15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்

Amos

அமெரிக்காவில் 15வது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Sexual Assault Attorneys Richmond, VA | Abuse in Virginia

பக்ஹனோன் நகரை சேர்ந்த அமோஸ் லீ ஸ்பியர்ஸ் (30) என்பவர், இவர் கடந்தாண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்தாண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை 15 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அமோஸ், அந்த சிறுமியிடம் செல்போனில் மிக மோசமாகவும் தகாத வார்த்தைகளாலும் பலமுறை பேசியுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் நடத்திய புகாரில், போலீசார் அமோஸை கைது செய்தனர். அவருக்கு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜாமீன் தொகையாக $75,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு கோரியதாக ஸ்பியர்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அண்மை காலமாக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதும்,, துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுகுறித்து பைடன் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்க மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பொது இடங்களிலோ அல்லது நீர் நிலைகளிலோ தூக்கிவீசப்படும் நிகழ்வுகளும் பல்வேறு மாகாணங்களில் அரங்கேறிவருகின்றன.