பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? விபரீதமான சாகசம்!

Baby

மெக்சிகோவில் பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா என பார்ப்பதற்காக நடத்தப்பட்ட விநோத சாகசம் விபரீதமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் எப்படி ஜாதகம், ஜோசியம் என கூறுகிறோமோ அதேபோல் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என பார்ப்பதற்கு வித்தியாசமான பழக்கத்தை கடைபிடிப்பதுண்டு.

அது என்னவெனில் விமானம் வானில் பறக்கும் அப்போது தம்பதியினர் கீழிறிந்து விமானத்தை பார்த்துக்கொண்டிருப்பர்.

அந்த விமானத்தின் பின்புறத்திலிருந்து பிங்க் நிற வண்ணம் வந்தால் பெண் குழந்தை, ஊதா நிற வண்ண புகை வந்தால் அது ஆண் குழந்தை என கணிபதுண்டு.

அதுபோன்ற ஒரு சம்பவம் மெக்சிகோவில் நடைபெற்றுள்ளது. கேன்கன் நகரின் கரீபியன் கடலுக்கு அருகே உள்ள காயல் மீது சாகசத்துடன் விமானம் ஒன்று பறந்தது.

தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா என பார்க்கும் ஆவலில் அந்த சாகச விமானத்தை படகு ஒன்றில் இருந்து பெற்றோராகப் போகும் தம்பதி பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த விமானம் பிங்க நிற புகையை வெளியிட்டது.

இதனை கண்ட தம்பதியினர் பெண் குழந்தை பெண் குழந்தை என சந்தோஷமாக கத்தினர்.

A plane dropped a pink cloud in a gender-reveal stunt. Then it fell to the  sea, killing two : aircrashinvestigation

ஆனால் அடுத்த சில வினாடிகளில் சாகசம் செய்த விமானம் தலைகுப்புற காயலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த விமானியும், துணை விமானியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.