வயது முதிர்வால் அவதிப்பட்ட இரு சிங்கங்கள் கருணைக்கொலை!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் பூங்காவில், வயது முதிர்வால் மிகவும் அவதிப்பட்டு வந்த இணைபிரியா ஜோடி சிங்கங்கள் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளன.

சிகாகோவில் உள்ள லிங்கன் பூங்காவில் பிறந்த ஹியூபர்ட் என்ற ஆண் சிங்கமும் சியேட்டலில் உள்ள வுட்லாண்ட் வன உயிரியல் பூங்காவில் பிறந்த கலிசா என்ற பெண் சிங்கமும் லாஸ் ஏஞ்சலஸ் பூங்காவில் கடந்த 2014ஆம் ஆண்டு சந்தித்துக்கொண்டன. கண்ட நொடி முதல் நட்பாய் பழகிய இரு சிங்கங்களும் அன்பும் காதலும் ஊற்றிப் பொழிந்து 6 ஆண்டுகள் இணைப்பிரியா ஜோடியாக பூங்காவில் வலம் வந்தன.4

Lion

21 வயதான அந்த இரண்டு சிங்கங்களும் சராசரி வயதை கடந்துவிட்டதால் உடல் நலக்குறைவால் மிகவும் அவதிப்பட்டன. இதனால், மிகவும் கடினமான முடிவெடுத்த வன உயிரியல் பூங்கா அதிகாரிகள், ஹூபர்ட் மற்றும் கலிசாவை ஒன்றாகவே கருணைக் கொலை செய்துள்ளனர். ஒரு சிங்கத்தின் சராசரி ஆயுட்காலம் 14 முதல் 17 ஆண்டுகளாகும். ஆனால் இந்த இரு சிங்கங்களும் 21 வயதை கடந்ததைவிட்டதால் உடல்நலம் மெலிந்து காணப்படுகிறது. மேலும் நோய்கள் அவற்றிற்கு இருப்பதால் வாழ்நாளை எண்ணிவருகின்றன.

பிப்ரவரி 7, 1999 இல் லிங்கன் பார்க் உயிரியல் பூங்காவில் பிறந்த இதுவரை ஹூபர்ட் 10 குட்டிகளை ஈன்றுள்ளது. கலிசா டிசம்பர் 26, 1998 இல் உட்லேண்ட் பூங்காவில் பிறந்தார்.உலகம் முழுவதும் 23,000 முதல் 39,000 சிங்கங்கள் மட்டுமே இதுவரை உயிர்வாழ்கின்றன. வேட்டையாடுதல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக சிங்கங்கள் பெரும்பாலும் உயிரிழந்தன. இத்துடன்ஆப்பிரிக்க சிங்கங்களுக்கே இருக்கிற தனி சிறப்பம்சம் ஒரு சிங்கமானது ஒரு நாளைக்கு 20 மணிநேரம் தூங்கும் குணம் கொண்டது.

இதையும் படிக்கலாமே: டிக்டாக்கை மைக்ரோசாப்டுக்கு விற்க 45 நாள் அவகாசம் அளித்த ட்ரம்ப்!