இந்திய வம்சாவளியினர் 4 பேர் மற்றும் திருநங்கை அமெரிக்க எம்பிக்களாக தேர்வு!

Sarah McBride

அமெரிக்க பிரதிநிதிகள் அவைக்கான தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பேர் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதிபர் தேர்தலுடன் அமெரிக்காவில் காங்கிரஸ் சபைக்கான தேர்தலும் நடந்து வருகிறது. காங்கிரஸ் சபை என்பது அமெரிக்காவின் நாடாளுமன்ற சபை ஆகும். இதில் இரண்டு அவைகள் உள்ளது.

ஒன்று செனட் இன்னொன்று பிரநிதிகள் சபை. இதனிடையே அமெரிக்கா தேர்தலில் நான்கு மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு உள்ளது.

பென்சில்வேனியா, விஸ்கோன்சிஸ், ஜார்ஜியா, மிக்சிகன் ஆகிய 4 மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

All four Democratic Indian-American lawmakers re-elected to House of Representatives

இந்நிலையில் அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக திருநங்கை ஒருவர் எம்பியாக தேர்வாகியுள்ளார்.

டெலாவேர் மாநில பிரதிநிதிகள் அவைக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட திருநங்கை சாரா மெக்ப்ரைட் வெற்றிப்பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களாக திருநங்கைகள் பதவி வகிக்கும் நிலையில் எம்பி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் திருநங்கை என்ற பெருமையை சாரா பெறுகிறார். வழக்கறிஞரான சாரா, ஓரின சேர்க்கையாளர் விவகாரத்தில் ஆதரவாக செயலாற்றியவர்.

இதேபோல் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கிய இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர்.அமி பெரா, பிரமிளா ஜெயபால், ரோ கண்ணா மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேர் மீண்டும் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளானர்.

சென்னையைச் சேர்ந்த பிரமிளா ஜெயபாலும், டெல்லியை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தியும் 3வது முறையாக எம்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஓபாமா போட்டியிட்ட போது அவரால் முன்மொழியப்பட்டவரே ராஜாகிருஷ்ணமூர்த்தி.

இவர் கடந்த 2004ஆம் ஆண்டு ஒபாமாவின் செனட் பிரசாரத்தின் ஆலோசகராகவும், 2008ஆம் ஆண்டு ஓபாமாவின் தனி ஆலோசகராகவும் ராஜா கிருஷ்ணமூர்த்தி பணியாற்றியுள்ளார்.

மேலும் 2007 முதல் 2009ஆம் ஆண்டு வரை இல்லினாய்ஸ் மாகாணத்தின் துணை நிதியமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: தோல்வி பயம்? வாக்கு எண்ணிக்கையை நிறுத்த ட்ரம்ப் திட்டம்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

 

Twitter