சுதந்திரத்தின் வரலாறு! 245வது சுதந்திரத்தை கொண்டாடும் அமெரிக்கா

கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம், அறிவியல் ஜனநாயக அரசியல் என்று பல துறைகளிலும் உலகின் பல நாடுகளுக்கு முன்மாதிரியாய் திகழும் அமெரிக்கா 245வது சுதந்திரத்தை கொண்டாடுகிறது.

கி.பி. 1492ல் கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்கா என்னும் பரந்த நிலபரப்பை கண்டுபிடித்தார். இவரைத் தொடர்ந்து அமெரிக்கா மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமா? என்று ஆய்வு செய்வதற்காக இத்தாலி நாட்டைச் சேர்ந்த வணிகரும், எக்ஸ்ப்ளோரருமான அமெரிக்கோ வெஸ்புகி அங்கு பயணம் மேற்காண்டார். அமெரிக்காவில் பல இடங்களுக்கும் சென்ற வெஸ்புகி தனது அமெரிக்க பயண அனுபவத்தை தொகுத்து NEW WORLD எனும் புத்தகத்தை எழுதினார். இதில்தான் அமெரிக்கா என்ற வார்த்தை முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது.

USA Independence Day: Celebrating America's Birthday

வெஸ்புகி எழுதிய நூலின் மூலம் அமெரிக்கா குறித்த தகவல்களை அறிந்த இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் தங்கள் குறுக்கு புத்தியை காட்ட தொடங்கின. இந்த ஐரோப்பிய நாடுகள், தங்கள் காலனியாதிக்கத்தை அங்கு ஏற்படுத்த போட்டி போட்டன. அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் என்ற பூர்வ குடிமக்கள் வாழ்ந்து வந்த நிலையில் 1600 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பியர்களின் குடியேற்றம் அமெரிக்க மண்ணில் தொடங்கியது. முதன் முறையாக 1620ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் இருந்து May Flower எனும் கப்பல் 102 பிரிட்டன் குடிமக்களை சுமந்து கொண்டு அமெரிக்காவை நோக்கிப் புறப்பட்டது. 66 நாட்கள் கடின கடற்பயணத்திற்குப் பிறகு தற்போதைய மசசூசட்ஸ்-ல் (Massachusetts) உள்ள கேப் காட் (cape cod) எனும் இடத்தை ’மே மலர்’ வந்தடைந்தது. இந்த இடத்திற்கு பிளைமௌத் எனும் தங்களின் இங்கிலாந்து நாட்டின் நகர் பெயர் வைத்து முதல் காலனியை அமெரிக்காவில் ஆங்கிலேயர் அமைத்தனர்.

 

’மே மலர்’ கப்பலை அடுத்து இங்கிலாந்திலிருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கில் மக்கள் அமெரிக்க மண்ணிற்கு வரத் துவங்கினர். 1607 ஆம் ஆண்டிலிருந்து 1776 ஆண்டு வரையிலும், அமெரிக்க மண்ணில் தங்களை நிலைநிறுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கல், அட்லாண்டிக் கடற்கரை பகுதிகளில் மொத்தம் 13 குடியேற்பு காலனிகளை (colonies) அமைத்து,ஆங்கில அரசின் கீழ் கொண்டு வந்தன. முதலில் ஆங்கிலேயரின் நிர்வாகத்தின் மீது திருப்தி அடைந்த அமெரிக்காவின் பூர்வீக மக்கள், 1700 களின் பாதியில் ஆங்கிலேயர் அடுத்தடுத்து கொண்டு வந்த அதிரடி சட்டங்களால் அதிருப்திக்கு உள்ளாயினர்.

ஆங்கிலேய அரசு தனது பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் பூர்வீக அமெரிக்க மக்கள் மீது பல கடுமையான வரிகளை விதித்தது. 1764ம் ஆண்டு சர்க்கரைத் தயாரிக்கும் மொலேசிஸ் உட்பட பல வணிக பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்தது. மேலும் அமெரிக்காவில் குடியேறிய இங்கிலாந்து ராணுவத்திற்கு தேவையான உணவு, வீடு உட்பட அனைத்து வசதிகளையும் பூர்வீக அமெரிக்கர்கள் செய்து தர வேண்டும் என சட்டம் போட்டது. பின் 1765ம் ஆண்டு தபால் முத்திரை எனும் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி பூர்வீக அமெரிக்க மக்கள் வாங்கும் எல்லா பொருட்களுக்கும் இங்கிலாந்தின் தபால் முத்திரை கட்டாயம் வாங்கியாக வேண்டும். இதன்மூலம் நேரடி வரிவிதிப்பை பூர்வீக அமெரிக்கர்கள் மத்தியில் அமல்படுத்தியதால் அந்த அப்பாவி மக்கள் கடும் கோபம் கொள்ள செய்து புரட்சியில் ஈடுபட தூண்டியது.

இதனையடுத்து ஆங்கிலேய கிழக்கு இந்திய நிறுவனத்தின் தேயிலை இறக்குமதியை எதிர்த்து முதல் புரட்சியை பூர்வீக அமெரிக்க மக்கள் ஆரம்பித்தனர். இந்த புரட்சிகள் இங்கிலாந்தின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால்,பிரிட்டிஷ் அரசு கடுங்கோபம் கொண்டு வன்முறையில் இறங்கியது. பூர்வீக குடிமக்களை தண்டிக்கும் நோக்கில் பிரிட்டன் அரசு பாஸ்டன் துறைமுகத்தை மூடியது. இதனால் பாஸ்டன் நகரத்து வணிகர்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய முடியாமல் தவித்தனர். மேலும் பூர்வீக அமெரிக்க மக்களின் சட்ட அதிகாரத்தையும், நீதி வழங்கும் அதிகாரத்தையும் அதன் தலைவர்களிடமிருந்து ஆங்கிலேய அரசு பறித்தது.

Us flag

இதனால் பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இயங்கிவந்த விர்ஜினியாவை தவிர்த்த 12 மாகாணங்களும் ஒன்று சேர்ந்து ’முதல் continental congress’ என்ற அமைப்பை உருவாக்கினர். இதன்மூலம் ஆங்கிலேய அரசுக்கு செலுத்தும் வரியை கைடுவதாக கோரிக்கை மனு ஒன்றை அனுப்பினர். இங்கிலாந்து அரசோ காலனிகளின் எந்த கோரிக்கையை ஏற்காமல் அவர்கள் மீது அதிகளவில் வன்முறையை கட்டவிழ்த்தது.

கோரிக்கை விடுத்து ஏற்காத ஆங்கிலேய அரசுக்கு எதிராக திரண்ட தேசபற்று நிறைந்த அமெரிக்கர்கள் புரட்சிக்கு தயாராகினர். அதன்படி பிரிட்டிஷ் அரசின் பொருட்களை புறக்கணித்தும், எழுத்தின் மூலமாகவும், வன்முறை மூலமாகவும் ஆங்கியே அரசை எதிர்த்து போராடத் துவங்கினர். மேலும் ஜார்ஜ் வாஷிங்க்டனை படை தளபதியாக அறிவித்து ஆங்கிலேய படைகளை எதிர்த்து போரில் ஈடுபட்டனர். இதற்கிடையே 1775ம் ஆண்டு இரண்டாம் continental congress’ அமைப்பு மூலம் அமெரிக்கர்கள் விடுத்த கோரிக்கையையும் ஆங்கிலேய அரசு ஏற்கவில்லை.

ஆனாலும் தங்கள் புரட்சி போராட்டத்தை கைவிடாத அமெரிக்கர்கள் பல நாடுகளை தங்களது போராட்டத்திற்கு ஆததரவாக திரட்டினர். அத்துடன் அமெரிக்க காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று பிரான்ஸ், ஸ்பெயின், இந்தியா ஆகிய நாடுகளும் ஆதரவளிக்க முன்வந்தன. அதன் தொடர்ச்சியாக 1776ம் ஆண்டு ஆங்கிலேய அரசை தீரத்தோடு எதிர்த்த அமெரிக்கர்கள் வெற்றியை நோக்கி செல்ல தொடங்கினர்.

இங்கிலாந்தின் காலனிகளாக இருந்த 13 மாகாணங்கள் இணைந்து சுதந்திரமான தனி நாடாக அறிவித்துக்கொண்டது. மேலும் இந்த மாகாணங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அமெரிக்காவின் விடுதலையை நாள் 1776 ஜூலை 4ம் நாள் பிரகடனப்படுத்தின. அதே நாளில் தான் அமெரிக்காவின் சுதந்திர பிரகடன வரைவு தாமஸ் ஜெபர்சனின் பெரும் பங்களிப்புடன் உருவானது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நாளை நினைவுக்கூறும் வகையில் அதுமுதல் ஜூலை மாதம் 4ம் நாள் ஆண்டுதோறும் அமெரிக்க சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது அமெரிக்கா 245 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.