70 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்காவில் பெண்ணுக்கு மரணதண்டனை!

Lisa Montgomery

70 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் 1953 ஆம் ஆண்டு தான் கடைசியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு அங்கு யாருக்குமே அதுபோன்று ஒரு கொடூர தண்டனை விதிக்கப்பட்டவில்லை. ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தததும் 70 ஆண்டுகளாக மரண தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் இருந்த நிலைமையை முடிவுக்கு கொண்டுவந்தார்.

ஜூலைக்குப் பின் ஏழு கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போதுதான் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. 16 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது.

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லிசா மாண்ட்கோமேரி என்ற பெண், கர்ப்பிணியான பாபி ஜோ ஸ்டின்னெட் என்ற கர்ப்பிணி பெண்ணை கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். அதுவும் அந்த பெண்ணை சாதரணமாக கொலை செய்யவில்லை. வயிற்றை கிழித்து அவரது கருவிலிருந்த குழந்தையை திருடிக்கொண்டு தன் வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளார். தனக்கு கிடைக்காத குழந்தை யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் லிசா இவ்வாறு செய்துள்ளார்.

Bobbie Jo Stinnett.

இதுகுறித்து தகவறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், லிசாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்த பாபி ஜோனின் குழந்தையை மீட்டு அவரது கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விக்டோரியா ஜோ ஸ்டின்னெட் என பெயரிடப்பட்ட அந்த குழந்தைக்கு தற்போது 16 வயதாகிறது. இந்நிலையில், லிசாவுவுக்கு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. லிசா, செய்த கொடூர கொலையால் மரண தண்டனைக்கு ஒரு எதிர்ப்புக் குரல் கூட எழவில்லை.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் கொரோனா இரண்டாம் அலை பரவல்! மீண்டும் ஊரடங்கா?

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter

 

Related posts