அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

louise-gluck

1901 ஆம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969 ஆம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசு சேர்க்கப்பட்டது.

ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் நோபல் பரிசுக்கான போட்டியில் உள்ளனர்.

இவர்களின் தகுதியானவர்கள் நாளை முதல் அறிவிக்கப்பட உள்ளனர். மருத்துவத்துக்கான நோபல் பரிசு 5ஆம் தேதியும் இயற்பியல் துறைக்கான விருது 6 ஆம் தேதியும், வேதியியலுக்கு 7 ஆம் தேதியும், இலக்கியத்திற்கான நோபல் பரிசு 8 ஆம் தேதியும் அறிவிக்கப்பட்டன.

அமைதிக்கான நோபல் பரிசு இன்றும், அக்டோபர் நாளையும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படவுள்ளது.

Louise Glück: “April” – teoppoet poetteop

அமெரிக்காவை சேர்ந்த லூயிஸ் குளூக் என்ற பெண் கவிஞருக்கு இந்தாண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஸ்‌வீடன் நாட்டில் உள்ள நோபல் அகாடமி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

லூயிஸ் குளூக் சுமார் 52 ஆண்டுகளாக கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு வருகிறார். இவரது கவிதைகள் இயற்கை மற்றும் மனித உளவியலை சார்ந்து இருக்கும்.

நோபல் விருதுடன் சுமார் 8 கோடி ரூபாய் பரிசுப் பணமும் லூயிஸ் குளூக்குக்கு வழங்கப்பட உள்ளது.

இந்தாண்டு கொரோனா பீதி காரணமாக நோபல் பரிசை ஸ்வீடன் மன்னர் வழங்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கடவுள் கொடுத்த வரம்: அதிபர் ட்ரம்ப்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter