இந்தியாவுக்கு மீண்டும் உதவிய அமெரிக்கா!

Amphotericin B

கொரோனாவிலிருந்தே மீளாதே இந்தியாவுக்கு புது தலைவலி ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களை தற்போது கருப்பு பூஞ்சை நோய் தாக்கிவருகிறது.

இந்த நோய்க்கு ஆம்ப்போட்டெரிசின் பி (Amphotericin-B) மருந்து சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.

இந்த மருந்து கருப்புப் பூஞ்சை நோய்க்கு எதிரான நோயாளிகளுக்கு வழங்கக்கூடியதாகும்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையைத் தொடர்ந்து தமிழகம், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கருப்புப் பூஞ்சை பரவல் குறித்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு அரசு ஊழியர் உட்பட 20 பேர் வரை  பாதிப்பு: ஆளுநர் தமிழிசை தகவல் | black fungus - hindutamil.in

இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் போர்க்கால அடிப்படையில் கருப்புப் பூஞ்சை சிகிச்சைக்கான மருந்தை கொள்முதல் செய்யுமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து அமெரிக்க மருந்து நிறுவனங்களிடமிருந்து ஆம்ப்போட்டெரிசின் பி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன

அமெரிக்காவிலிருந்து வந்த 50 ஆயிரம் ஆம்ப்போட்டெரிசின் பி (Amphotericin-B) மருந்து குப்பிகளை மும்பை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

iஇதேபோல் அமெரிக்காவை சேர்ந்த கிலியட் என்ற மருந்து நிறுவனம் கருப்பு பூஞ்சை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி என்ற மருந்தில் 1 லட்சத்து 21 ஆயிரம் மருந்து குப்பிகளை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது.

மேலும் 85 ஆயிரம் குப்பிகள் ஓரிரு நாட்களில் அனுப்பப்படும் என கிலியட் நிறுவனம் தெரிவித்துள்ளது.