அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இன்னும் ஓர் ஆண்டு வரை நீடிக்கும்: மருத்துவ நிபுணர்

Corona Patients

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை.

இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு நாள் இன்றுக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

இதுவரை 66 லட்சத்து 76 ஆயிரத்து 889 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்குள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 8 மாதங்களாகியும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்தபடியே இருக்கிறது. அது இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு ஆண்டு ஆகலாம் என மூத்த மருத்துவ நிபுணர் அந்தோனி பாசி தெரிவித்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டின் இறுதியில் தான் அமெரிக்கா இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் தன்னை ட்ரம்ப் தலைமையிலான அரசு அமைதியாக இருக்கும்படி கூறிய தகவலில் உண்மை இல்லை என்றும் மூத்த மருத்துவ நிபுணர் அந்தோனி பாசி தெரிவித்தார்.

தடுப்பூசி கண்டுபிடித்தால் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்று குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையும் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்கலாமே: பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கை குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டறிக்கை!

FB Page
– https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
– https://twitter.com/tamilmicsetusa