அமெரிக்காவில் வில்வித்தையில் அசத்தும் தமிழக வம்சாவளி சிறுவன்

Arjun raj

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருக்கும் சிகாகோ நகரில் வசிப்பவர் 10 வயதான அர்ஜூன் ராஜ். இவர் மாகாண அளவிலான Olympc recurve bowmen- 100feet போட்டியில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றுள்ளார். இதன் அடுத்தடுத்த படிநிலை போட்டிகள் அமெரிக்க நாடு தழுவிய அளவில் நடைபெறவுள்ளது. அர்ஜூன் ராஜ் நாடு அளவிலான போட்டியில் வெற்றிப்பெற்று முதலிடம் பிடித்தால் அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்புள்லது.

மிக குறைவான வயதில் இவ்வளவு திறமை வாய்ந்த அர்ஜூன் ராஜ் சிகாகோ மாகாண BOW Hunters Club மூலம் கடந்த 3 ஆண்டுகளாக பயிற்சி எடுத்து வருகிறார். ராஜசேகர்- லாவண்யாவின் மகனான இவர் கோவை மற்றும் சேலத்தை சேர்ந்தவர். அர்ஜூன் ராஜின் தாத்தாவும், பாட்டியும் கோவையில் உள்ள கணபதி நகரில் வசித்துவருகின்றனர்.

Arjun

அர்ஜூன் ராஜ்க்கு வில்வித்தை வர காரணமும் மிகவும் சுவாரஸ்யமானது. அதாவது அவருக்கு மகாபாரதம், ராமாயணம் கதை படிப்பது என்றால் கொள்ளை பிரியமும். மகாபாரத கதாபாத்திரத்திமான அர்ஜூனன் மீதுள்ள அளப்பரியா காதாலே அர்ஜூனை வில்வித்தை கற்றுக்கொள்ள தூண்டுதலாக இருந்ததாம். இதிகாசங்களை அர்ஜூனுக்கு தொடர்ந்து கற்றுக்கொடுப்பது அவரது பெற்றோர்களே. கொரோனா விடுமுறையைக் கூட வில்வித்தைக்கான பயிற்சி காலமாக மாற்றி தொடர்ந்து வெற்றிப்பாதையில் பயணித்துவருகிறார் அர்ஜூன். வாயெல்லாம் ஆங்கிலம் பேசி ஸ்டைலாகவும், மாஸாகவும் அமெரிக்காவில் வாழ்ந்தாலும், இந்திய இதிகாசங்களையும், கலைகளையும், கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்ள துடிக்கும் இந்த தமிழக சிறுவனின் வெற்றிப்பயணம் தொடர வேண்டும் என்பதே தமிழ் மைக் செட் செய்தி நிறுவனத்தின் ஆவலும் கூட…

இதையும் படிக்கலாமே:  தபால் வாக்கு பேரழிவை ஏற்படுத்தும்: ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter