சான் பிரான்சிஸ்கோவில் ஆசிய நாட்டு முதியவரை ஓங்கி மிதித்த அமெரிக்க இளைஞர்

Asian man

அமெரிக்காவில் ஆசியர்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்நிலையில் ஆசிய நாட்டு முதியவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் வாக்கரில் அமர்ந்தபடி, ரோங் சின் லியோ என்ற 84 வயது முதியவர் பேருந்துகாக காத்திருந்தார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த அந்த முதியவரை நோக்கி ஓடிவந்த அமெரிக்க இளைஞர் ஒருவர்,லியோவை மிதித்து தரையில் மோதினார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றன.

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள், லியோவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அவருக்கு தலையில் ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளன.

லியோவை தாக்கிவிட்டு தப்பியோடிய எரிக் ரமோஸ் என்ற 23 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இதுபோன்று அமெரிக்காவில் ஆசியாவை சேர்ந்தவர்கள் மீது தொடர்ந்து இனவெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன் அதே சான் பிரான்சிஸ்கோவில் 70 வயதான மூதாட்டி ஒருவரை வெள்ளையர் ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதேபோல் நியூயார்க்கிலும் 25 வயது ஆசிய பெண் மீது அமெரிக்கர்கள் தாக்குதல் நடத்தினர்.