அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையை எட்டிவிட்டது- ட்ரம்ப்

corona vaccine

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையை எட்டிவிட்டதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றால் உலகமே சிக்கி தவித்துவரும் நிலையில் அதற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சுமார் 120 முன்னணி நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் முனைப்புக்காட்டி வருகின்றன.

corona vaccine

இந்நிலையில் உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்கா, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறது. ஒருபுறம் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா என்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனம், எம்.ஆர்.என்.ஏ-1237 என்ற கொரோனா தடுப்பு மருந்தை தன்னார்வலர்களிடம் பரிசோதனை செய்து வருகிறது. மறுபுறம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிபுணர்கள்ன ஆஸ்ட்ரா செனக்கா தடுப்பு மருந்துக்கான சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மருந்து சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் உடலில் செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப், “ஆஸ்ட்ரா செனக்கா தடுப்பு மருந்து 3-ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையை எட்டிவிட்டது. இந்த செய்தியால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். சாத்தியம் இல்லாததை அமெரிக்க செய்து காட்டி சாதனை படைத்துள்ளது. தடுப்பு மருந்துக்கான நடைமுறைகள் பல ஆண்டுகளை எடுக்கும். ஆனால், எனது தலைமையிலான நிர்வாகம் துரிதப்படுத்தி சில மாதங்களிலேயே முடித்துள்ளது” என பெருமையாக கூறினார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாகவே கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிக்கலாமே:இந்திய வம்சாவளி சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு! வியந்து நின்ற அமெரிக்க விஞ்ஞானிகள்…

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa