விண்ணுக்கு செல்லும் அமேசான் நிறுவனர்!

Amazon CEO

அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ள விண்கலத்தில், ‘அமேசான்’ நிறுவனர் ஜெப் பெசோஸ் பயணிக்க உள்ளார்.

உலகின் முன்னணி கோடீஸ்வரரும், அமேசான் நிறுவனருமான ஜெப் பெசோஸ், புளூ ஆரிஜின் என்ற விண்வெளி ஏவுகணைகள் மற்றும் விண்கல தயாரிப்பு நிறுவனத்தை, 2000 ஆம் ஆண்டு துவங்கினார். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் தலைமையகத்துடன் இயங்கி வரும் இந்த நிறுவனத்தை, அவர் நடத்தி வருகிறார்.

இதற்கிடையே, வரும் ஜூலை 5ம் தேதி அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பதவியில் இருந்து விலகப்போவதாக, ஜெப் பெசோஸ் சமீபத்தில் அறிவித்தார்.

Jeff Bezos, 57, the billionaire founder of Amazon and Blue Origin, said he has dreamed of travelling to space since he was five years old [File: John Locher/AP Photo]

இந்நிலையில், புளூ ஆரிஜின் நிறுவனத்தால், அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ள விண்கலத்தில், ஜெப் பெசோஸ் பயணிக்க உள்ளார்.

வரும் ஜூலை 20-ம் தேதி அவர் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Blue Origin நிறுவனம் விண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்ப உள்ளது. இந்த முதல் பயணத்திலேயே ஜெஃப் பெஸோஸ் பயணிக்க உள்ளார்.

ஜெஃப் பெஸோஸுடன் அவரது சகோதரரும் விண்வெளிக்கு பயணிக்க உள்ள நிலையில், 3-வது இருக்கை ஏலம் விடப்பட்டது.

136 நாடுகளை சேர்ந்த 5,200-க்கும் அதிகமானோர் இந்த ஏலத்தில் பங்கேற்றனர்.

இறுதியில் அதிகபட்சமாக 2 புள்ளி 8 மில்லியன் டாலருக்கு ஏலம் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பலமுறை இந்த Blue Origin நிறுவனத்தின் New Shepard ராக்கெட்டில் ஜெஃப் பெஸோஸ் பயணித்து பயிற்சி மேற்கொள்ள உள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜெஃப் பெஸோஸ், ‘ஐந்து வயதில் இருந்தே விண்வெளிக்கு பயணிக்க வேண்டுமென்ற கனவு எனக்குள் இருந்தது. அது மிகவும் சாகசம் நிறைந்த ஒன்றாக இருக்கும்’ என அவர் பதிவிட்டிருந்தார்.