இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து தயாரிக்கும் கொரோனா மருந்து!

Vaccine

கொரோனாவுக்கு தடுப்பு‌மருந்தாக மூக்கு வழியாக விடும் சொட்டு மருந்தை‌ தயாரிக்கு‌ம் ஒப்பந்தத்தை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் பெற்றுள்ளது.

செலவு குறைப்பு, குறைந்த விலை, அதிக தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு 100 கோடி சொட்டு மருந்தை அந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

உலகமே கொரோனாவுக்கு எதிரான போரில் சிக்கி தவித்துவரும் சூழலில் அமெரிக்காவின் மிசோரியில் உள்ள வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த சொட்டு மருந்தை ஹைதரபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கான ஒப்பந்தம் அந்த பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருந்து தயாரிப்பு, விநியோகம் ஆகிய உரிமைகளையும் பாரத் பயோடெக் நிறுவனம் பெற்றுள்ளது.

எனினும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா விநியோக உரிமையை வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகமே வைத்துக் கொண்டுள்ளது.

corona vaccine

கோவிஷீல்டு, ஸ்புட்நிக் போன்ற கொரோனாவுக்காக உருவாக்கப்பட்டு வரும் தடுப்பு மருந்துகள், ஊசிகள் மூலம் போடப்படுவதால், அதற்கான ‌செலவு அதிகரிக்கும் என்றும், ஆனால் நேரடியாக மூக்கு வழியாக செலுத்தும் சொட்டு மருந்தை கண்டுபிடித்திருப்பதால், செலவு குறையும் என்றும் பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.

மூக்கு வழியாக விடப்படும் ‌இந்த சொட்டு மருந்து கொரோனா வைரஸ் ‌பரவலை தடுப்பது மட்டுமின்றி, செல்களில் நோய் எதிர்ப்பு ‌சக்தியையும்‌ கூட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், வைரஸ் பரவும் மூக்கு மற்றும் தொண்டை பாதைகளிலும், மருந்து உடனடியாக செயல்படும் என்பதால், முதற் கட்டத்திலேயே கொரோனா வைரஸ் உடலுக்குள் பரவுவதை நிறுத்தி விடும் எனவும் சொட்டு மருந்தை கண்டு‌பிடித்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்‌.

இதையும் படிக்கலாமே: இந்தியா – சீனா இடையிலான எல்லை பிரச்னையை தீர்க்க நான் உதவி பன்றேன் – அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa