இந்தியாவுடன் ட்ரம்ப் அரசு வகுத்த கொள்கையை பின்பற்ற பைடன் அரசு முடிவு!

Biden- Modi

இந்தியா உள்ளிட்ட இந்தோ பசிபிக் நாடுகளுடனான உறவு தற்போது உள்ளது போலவே தொடரும் பைடன் அரசு திட்டமிட்டுள்ளது. முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசின் கொள்கைகளையே பின்பற்றவும் பைடன் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவான் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிப்பெற்றார். 306 தேர்வாளர்கள் வாக்குகளை பைடன் பெற்றிருந்தார்.

அவரது வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெறவிருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ட்ரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் ஒடுக்க முயற்சித்தால் மோதல் மூண்டது.

Joe Biden

மிகப்பெரும் பிரச்னைகளையெல்லாம் கடந்து அதிபராக பைடன் பதவியேற்றார். பதவியேற்றவுடன் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பைடன், முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். மேலும் ட்ரம்ப் இந்திய வம்சாவளியினருக்கு எதிராக கொண்டுவந்த திட்டங்களையும் ரத்து செய்தார்.

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய குவாட் எனப்படும் கூட்டமைப்பு 2017 இல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த கூட்டமைப்பு போர் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளது. பல்வேறு துறைகளிலும் இந்த நாடுகள் இணைந்து செயலாற்றி வருகின்றன.

இந்நிலையில் இந்தோ பசிபிக் பிராந்தியம் தொடர்பாக புதிய அதிபர் ஜோ பைடனின் நிர்வாக கொள்கை, இந்த கூட்டமைப்பின் அடிப்படையிலேயே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter