பைடன் – புதின் இடையே நடந்த சுவாரஸ்ய சந்திப்பு

biden putin

அமெரிக்க அதிபர் பைடனுடன் நடைபெற்ற சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் எதிரும்புதிருமாகவே இதுவரை இருந்துவந்தன. அதற்கு காரணம் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களில் ரஷ்யா தலையிட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இரு நாட்டு அதிபர்களும் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் சந்தித்து பேசினர். அப்போது இரு நாடுகள் குறித்து, பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Biden, Putin conclude summit between 'two great powers'; talk nuclear  power, human rights - World News

இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின், “சைபர் பாதுகாப்புத் துறை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இரு தரப்பினரும் சில கடமைகளை ஏற்க வேண்டும். ரஷ்யாவின் மிக முக்கியமான பகுதியில் உள்ள சுகாதார அமைப்புகளில் ஒன்றின் மீது சமீபத்தில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

அமெரிக்காவில் ப்ளாக் லைவ்ஸ் மேட்டர் அமைப்பு நடத்திய போராட்டங்கள், ஜனவரி 6 ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுனான இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது. ஆனால் அவர் தன்னை வெள்ளை மாளிகைக்கு வரும்படி அழைக்கவில்லை” எனக் கூறினார்.