இந்தியாவுக்கு போனவங்க திரும்பி வந்துடாதீங்க – அமெரிக்கா

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2கோடியை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனாபரவல் பாதிப்பால் படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவிவருகிறது.

இதனால் இந்தியாவே நிலைகுலைந்து போய் உள்ளது. பல்வேறு உலக நாடுகளும் கொரோனாவுக்கு ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்களை வழங்கி உதவி செய்து வருகின்றன.

Coronavirus
Image: AFP

இதனால், பிரிட்டன், ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகள், இந்தியா செல்ல தடை விதித்துள்ளன.

ஒரு படி மேலே போன ஆஸ்திரேலியா, இந்தியாவிலிருந்து வருவோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 23 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

இந்நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவிலிருந்து வரும் 4 ஆம் தேதி முதல் அமெரிக்கா வருவதை தவிர்க்கவும்.

அமெரிக்கர்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கு இந்த அறிவிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இந்தியா செல்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும்.

ஒரு வேளை இந்தியாவில் அமெரிக்கர்கள் தங்கியிருந்தால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நாடு திரும்புங்கள்” என அறிவித்துள்ளது.