அமெரிக்காவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க மோடிக்கு, பைடன் அழைப்பு

biden modi

பருவநிலை மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கேற்குமாறு இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த மாதம் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் பருவநிலை மாற்றம் குறித்த மெய்நிகர் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. பூமி நாளைக் குறிக்கும் ஏப்ரல் 22ஆம் தேதி 2 நாள் உச்ச மாநாடு தொடங்குகிறது.

இந்த மாநாட்டில் காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலையைக் குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், தடுப்பு நடவடிக்கைகள், அதன் மூலம் உருவாக்கப்படும் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது .

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்திய பிரதமர் மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா உள்ளிட்ட 40 நாட்டை சேர்ந்த நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

modi - biden

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் வரும் நவம்பர் மாதம் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநா பெரும் கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னோட்டமாக இந்த மாநாடு இருக்கும் என தெரிகிறது.

சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருவது புவிவெப்பமயமாதல். இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன.

புவிவெப்ப மயமாதலை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் குறைவதற்காக பருநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் 196 நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கடந்த 2015- ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த கூட்டத்தின்போது எட்டப்பட்டது.

முதலில் இந்த ஒப்பந்தத்தில் இணைந்த அமெரிக்கா, ட்ரம்புக்கு ஆட்சிக்கு வந்த பின் அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு அதிலிருந்து விலகியது.