கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து விசாரிக்க பைடன் உத்தரவு

Biden

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

corona

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று அமெரிக்கா.

இதனிடையே அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி அதிதீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திவரும் கோவிட் 19 வைரஸின் தோற்றம் குறித்து விசாரித்து அறிக்கையளிக்க அமெரிக்க புலனாய்வு அமைப்புகளுக்கு ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் தோற்றம் குறித்து தீர விசாரித்து 90 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய அமெரிக்க உளவு, புலனாய்வு அமைப்புகளுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தோற்றம் இயற்கையானதா அல்லது ஆய்வகத்தில் உருவானதா எனவும் ஒரு முழுமையான, வெளிப்படையான, சான்றுகளை வழங்கவும் ஆய்வு நடத்த பைடன் உத்தரவிட்டுள்ளார். இந்த விஷயத்தில் தங்களுடைய முயற்சிகளை இரட்டிபாக்கி பணியாற்றுமாறு புலனாய்வு அமைப்புகளுக்கு பைடன் உத்தரவிட்டுள்ளார்.