ஏப்.19க்குள் 90% பேருக்கு தடுப்பூசி- பைடன்

Biden

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

Biden

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர், நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

அமெரிக்காவில் அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், பதவியேற்ற முதல் 100 நாட்களில் 2 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படி, அமெரிக்காவில் 17 ஆயிரம் தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போடும்பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் ஜோ பைடன், “ஏப்ரல் 19ம் தேதிக்குள் அமெரிக்காவில் 90% பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும்.

மீதமுள்ள 10% பேருக்கு மே ஒன்றாம் தேதிக்குள் செலுத்தப்படும். தடுப்பூசி போடும் முகாம்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

நாம் இந்த கொடிய கொரோனா வைரஸ் உடன் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த யுத்தம் இன்னும் முடியவில்லை.

நான் பதவியேற்றபோது 8% ஆக இருந்த தடுப்பூசி போடும் எண்ணிக்கை, 75% ஆக அதிகரித்துள்ளது” எனக் கூறினார்.