மூளையின் நரம்பு மண்டலத்தை தாக்கும் அல்சீமர் நோய்க்கு மருந்து

alzheimer

மூளையின் நரம்பு மண்டலத்தை தாக்கக் கூடிய அல்சீமர் நோயை குணப்படுத்தும் அதுகனுமாப் (aducanumab) என்ற தனியார் நிறுவன மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் முதல்முறையாக ஒப்புதல் அளித்து உள்ளது.

அல்சீமர் நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு நினைவு குறைபாடு மற்றும் மன அழுத்தம் ஏற்பட்டு உடல் செயல்பாடுகள் படிப்படியாக குறையக்கூடும்.

மேலும் மூளைக்கு தேவையான அமிலாய்டு புரதத்தை தடுத்தும், ரத்த செல்கள் படிப்படியாக இறந்து நினைவுகளை இழப்பது மற்றும் மனக் குழப்பம், மன அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும்.

Biogen's controversial Alzheimer drug crosses FDA finish line

மருத்துவ வரலாற்றில் இந்த நோய்க்கு சிகிச்சை இல்லை என கூறப்படும் நிலையில் அரம்ப கட்ட அதிர்வலைகளை குணப்படுத்தும் மருந்தை தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனமான Biogen Inc’s கண்டுபிடித்து உள்ளது.

இந்த நிலையில் Biogen Inc’s நிறுவனத்தின் அதுகனுமாப் மருந்தின் ஆராய்ச்சி முடிகள் போதிய திருப்தியை அளிப்பதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் பொது விநியோகத்திற்கு ஒப்புதல் அளித்து உள்ளது.

தற்போது அமெரிக்காவில் 15 லட்சம் பேருக்கு இந்த மருந்து தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.