அமெரிக்காவில் வசித்துவரும் இந்தியர் ஐஎஸ்ஐ அமைப்பின் உளவாளியா?

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பின் உளவாளி என தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டை அமெரிக்காவில் வசித்துவரும் காஷ்மீரைச் சேர்ந்த டோனி அஷாய் மறுத்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மனைவி கௌரி உள்ளிட்ட சிலருடன் டோனி அஷாய் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதை நிலையில், ஆயுதம் ஏந்தி கிளர்ச்சியில் ஈடுபடுமாறு காஷ்மீர் இளைஞர்களை டோனி அஷாய் தூண்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அத்துடன் அவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் ஏஜெண்ட் என்றும் விமர்சனங்கள் கூறப்பட்டன.

tont ashai

இதனை மறுத்துள்ள டோனி அஷாய், தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக் கூறியிருக்கிறார். இந்திய ஊடகங்களில் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட செய்தியாளர்கள் ஆதாரங்களை காட்ட வேண்டும் அல்லது தன்னிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். தவறினால், அந்தச் செய்தியாளர்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் டோனி அஷாய் எச்சரித்திருக்கிறார்.

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetusa

Twitter : https://twitter.com/tamilmicsetusa