இறந்தவர்களை புதைக்க இடமில்லாமல் தவிக்கும் அமெரிக்கா!

funeral home

உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்கா தான்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டிருந்த நிலையில், அடுத்த சில மாதங்களிலேயே மிக வேகமாக நோய்த் தொற்று பரவியது.

பொது முடக்கத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு மாகாணங்களில் போராட்டங்கள் நடத்தியதால், ட்ரம்ப் நிர்வாகம் அந்த முடிவை கைவிட்டது.

இதன் காரணமாகவும் நோய் பரவும் வேகம் அங்கு பல மடங்கு அதிகரித்தது.

தற்போது வரை 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு உயிரிழந்திருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. சுமார் 2 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரம் பாதிப்புகளை கட்டுப்படுத்த மாடர்னா மற்றும் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்துகள், துரித கதியில் மக்களுக்கு செலுத்தப்பட்டுவருகிறது.

அமெரி்க்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.32லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 ஆயிரத்து 107 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஜூலையில் சற்று குறைந்திருந்த கொரோனா பாதிப்பு ஆக்ஸ்ட்டில் மீண்டும் அதிகரித்தது. நாள் ஒன்று 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கலிபோர்னியாவில் உள்ள தெற்குப்பகுதி நகரங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை புதைக்க கல்லறைகளில் இடமில்லாமல் மனித உடல்கள் நாள்கணக்கில் காத்திருக்கின்றன.

இறந்தவர்களின் உடல்களை குளிர்பதன பெட்டியில் பாதுகாத்து பின் அடக்கம் செய்வதாகவும், வழக்கமாக செய்யும் பணியை விட 6 மடங்கு அதிகமாகவே தற்போது பணி செய்ய வேண்டியிருப்பதாகவும் சடலங்களை புதைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் உடல்களை புதைக்கும், எரிக்கும் பணி தாமதமாக நடைபெற்றுவருகிறது.

இதையும் படிக்கலாமே:ஒரே நாளில் 3,927 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter