உடலுறவின்போது பாதியில் ஆணுறையை கழற்றினால் குற்றம்!

Condom

உடலுறவின்போது துணையின் சம்மதம் இல்லாமால் அணுறையை அகற்றுவது சட்டவிரோதம் என புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

உடலுறவின்போது ஆணுறையை பாதியில் கழட்டினால் அது, பாலியல் வன்கொடுமைக்கு சமம் என கலிபோர்னியாவில் புதிய சட்டம் வந்துள்ளது.

இதற்காக AB 453 என்ற புதிய மசோதாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும்போது இருவருக்கும் சந்தோஷம் இருந்தாலும், ஆண்களைவிட பெண்களுக்கு ஒருவித பயமும் பதட்டமும் இருக்கும்.

Image result for California May Become First State in the US to Make Removal of Condom Without Consent Illegal

காரணம் கருத்தறித்துவிடுவோமோ என்ற அச்சம். அந்த வகை பெண்களிடம் முதலில் ஆணுறை பயன்படுத்துவதாக ஒப்புதல் வாங்கிகொண்டு, பாதியில் திருட்டுத்தனமாக கழட்டுவது குற்றம் எனக் கூறப்படுகிறது.

இதனால் பெண்கள் உடல் அளவிலும், உணர்ச்சி ரீதியிலும் பாதிக்கப்படுவர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளா ஜனநாயகக் கட்சியின் அவை உறுப்பினர் கிறிஸ்டினா கார்சியா, “2017-ஆம் ஆண்டு முதல் துணையின் சம்மதமின்றி ஆணுறையை திருட்டுத்தனமாக அகற்றும் விவகாரத்தை சட்ட ரீதியில் தடுப்பதில் நான் பணியாற்றி வருகிறேன்.

இத்தகைய செயலைச் செய்பவர்களை தங்கள் தவறுக்கு பொறுப்பாகும் வரை நான் ஓய மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.

கலிபோர்னியாவில் அமல்படுத்தப்படும் இச்சட்டத்தின்படி, ஒரு ஆண் மகனால் உடல்ரீதியாகவோ, மன ரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ துன்பத்தை அனுபவித்தால் அவர் யாரால் பாதிக்கப்பட்டாரோ அவர்கள் மீது வழக்கு தொடரலாம்.

இழப்பீடும் பெறலாம். இந்த சட்டம் விரைவில் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.