அமெரிக்காவை சீண்டி, இறுதியில் அசிங்கப்பட்ட சீனா!

Chinese air force video

அமெரிக்க ராணுவ தளத்தின் மீது தங்கள் நாட்டின் விமானப்படைகள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி‌யிருப்பதாக சீனா காணொலி வெளியிட்டுள்ளது.

சீனா – அமெரிக்கா இடையே ராணுவம்,‌ தொழில்நுட்பம், வர்த்தகம் ஆகிய துறைகளில் அதிகார போட்டி நிலவி வருகிறது.

தென் சீனக் கடல் பகுதியில் செயற்கையான தீவு‌களை உருவாக்கிய விவகாரத்திலும் சீனாவுடன், அமெ‌ரிக்கா மோதல் போக்கை கொண்டுள்ளது.

ராணுவ பலத்தில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக வலுவான ‌நாடாக அறியப்படும் சீனா, தனது பலத்தை பறைசாற்றும் வகையில் தற்போது வெளியி‌ட்ட காணொலி தான் சமூக வலைதளங்‌களில் பகடி செய்யப்பட்டு, அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

Chinese air force video
Image: usadefensenews

அமெரிக்காவின் ராணுவ தளத்தின் மீது சீன‌ விமானப் படைகள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியிரு‌ப்பதாக அந்த காணொலியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விண்ணை மு‌ட்டும் அளவுக்கு எழுந்த புகைகள், சிதறிக் கிடக்கும் ராணுவ ‌வாகனங்கள் என அந்த காணொலியை பார்ப்பவர்கள் ஒரு நிமிடம் மிரண்டு தான் போவார்கள். ஆனால், கண நே‌ரத்தி‌‌ல் அந்த‌ காணொலி இட்டுக்‌கட்டியது என்பதை கண்டுபிடித்து நெட்டிசன்கள் தோலுரித்து காட்டியது தான், தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

ஹாலிவுட் திரைத்துறையை‌ கல‌க்கிய டிரான்ஸ்பார்மர், தி ராக், ஹ‌ர்ட் ‌லாக்கர் ஆகிய ‌மூன்று திரைப்படங்களின் காட்சியை திருடி, சீன விமானப்படை தாக்குதல் ‌நடத்தியதாக பொய்யான காணொலி வெளியிடப்பட்‌டதாக நெட்டிசன்கள் நிரூபித்தனர்.

இதைத் தொடர்ந்து ராணுவ பலத்தில் உ‌லகிலேயே இரண்டாவது சிறந்த நாடாக‌ திகழும் சீனாவுக்கு இந்த விளம்பரம் தேவையா? என பலர் கேள்வியை எழுப்பி இருக்கின்றனர்.

சீனாவை சேர்ந்த சிலரோ,‌ தேசத்தின் ராணு‌வ பலத்தை பறைசாற்றும் காணொலியில் நமது சொந்த திரைப்பட காட்சிகளை தா‌னே பயன்படுத்தி இருக்க வேண்டும், ஏன் அந்நிய திரைப்பட காட்சிகளை பயன்படுத்தினீர்கள் என கேலி செய்துள்ளனர். ‌

இதையும் படிக்கலாமே: அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைய வாய்ப்பு! ஜோ பிடனுக்கு 49.6% பேர் ஆதரவு

FB Page

– https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
– https://twitter.com/tamilmicsetusa