அமெரிக்காவில் இந்தியருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை!

கடந்த மே 25 ஆம் தேதி அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்ட் காவலர்களால் கொல்லப்பட்டதை கண்டித்து அங்கு போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது காவலர்கள் கருப்பினத்தவர்களிடம் கொடூரமாக நடந்துகொள்வதாகவும், இனவெறி மற்றும் மதவெறியை வெளிகாட்டுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெற்ற பிளாக் லைவ் மேட்டர்ஸ் போராட்டத்தால் அமெரிக்காவே ஸ்தம்பித்தது. என்னதான் இந்தியாவுக்கு அமெரிக்கா நட்பு நாடாக இருந்தாலும், அங்கே இந்தியர்களை வேற்றுகிரக வாசிகள் போலவே பார்க்கும் நிலை தொடர்ந்து நடைபெறுகிறது. அமெரிக்காவில் அவ்வப்போது இந்தியர்களும் தாக்கப்படுவது தொடர்கதையாகிவருகிறது.

Arrest

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம், நாக்பூரைச் சேர்ந்தவர், ஜிதேந்திர ஹரீஷ் பெலானி. 37வயதான இவர் ஐரோப்பிய நாடான செக் குடியரசில் வசித்துவந்தார். அதன்பின் தடை செய்யப்பட்ட மருந்து கடத்தல் மற்றும் பண மோசடி குற்றத்திற்காக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு பின், ஒராண்டுக்கு பின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக நடந்த விசாரணையில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள்களை கடத்திய குற்றத்தை, ஜிதேந்திரா ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருக்கு, கலிபோர்னியா நீதிமன்றம் மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.