தண்ணீரை மறந்த அமெரிக்கர்கள்! நினைவுப்படுத்திய ரொனால்டோ

coca cola and pepsi

செய்தியாளர் சந்திப்பின்போது விளம்பரத்துக்காக தன் முன் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்களைப் பார்த்த போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ, அதனை அங்கிருந்து அகற்றி அதற்கு பதிலாக அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலைத் தூக்கி, செய்தியாளர்களை பார்த்து தண்ணீர் குடிங்க எனக்கூறியது சமூக வலைதளத்தில் வைரலானது

கடந்த 1886 ஆம் ஆண்டு மே 8, அட்லாண்டா நகரில் ஜான் பிம்பிரெட்டன், என்ற பார்மசி கடைக்காரர் தற்செயலாகத் தான் தயாரித்த ஒரு கோலா சிரப்பை பக்கத்திலுள்ள ஒரு சோடா கடைக்காரருக்குக் கொடுத்தார்.

ஓரம் கட்டப்பட்ட கோலா

அவர் அதை சோடாவில் கலந்து ஒரு டம்ளர் பானத்தை 5 சென்ட்டகளுக்கு விற்கத் தொடங்கினார்.

ஊர்க்காரர்கள் பலரும் விரும்பி குடித்து, அந்த பானத்துக்கு அடிமையானார்கள்.

ஜான் பெம்பர்ட்டன், தன் தயாரிப்பான கோகோ கோலாவை, தலைவலி , மனச் சோர்வு ஆகியவற்றுக்கு மருந்து என்று கூறி விற்பனை செய்தார்.

சில மாதங்களிலேயே விற்பனை பல மடங்காகப் பெருகியது. பக்கத்து ஊர்க்காரர்களும் அட்லாண்டாவுக்கு வந்து கோக்கை குடித்து விட்டு போனார்கள்.

பிற நகரங்கள், மாகாணங்கள் என சில ஆண்டுகளிலேயே அமெரிக்காவில் பாப்புலரானது கோகோ கோலா.

இன்று உலகம் முழுவதும் ஒரு நாளில் 200 கோடி பாட்டில்கள் விற்கப்படும் பன்னாட்டு நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.

கோகோ கோலாவுக்கு பிறகு, 7 ஆண்டுகளுக்கு பிறகு பெப்சி பிறந்தது.

வடக்கு கரோலினாவில் நியூ பேர்ன் நகரை சேர்ந்த பிராட்ஹாம் என்பவரால் பெப்சி உருவாக்கப்பட்டது.

கோக் தலை வலி மருந்து என்று சொல்லப்பட்டதால், பிராட்ஹாம் வயிற்று வலி மருந்தாக பெப்சியை அறிமுகப்படுத்தினார்.

ஆனால், விற்பனை மந்தமாகவே இருந்தது. இதனால், கோகோ கோலா பாணியில், 1898 ஆம் ஆண்டு தன் பானத்தின் பெயரைப் பெப்ஸி கோலா என்று மாற்றினார்.

இன்று உலகின் மிகப் பெரிய குளிர்பான நிறுவனங்களான கோகோ கோலாவும் பெப்சியும் அமெரிக்கர்களை தண்ணீர் குடிப்பதையே மறக்க செய்திருக்கிறது என்பதே உண்மை