புதிய உச்சம்! ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா…

Patient

அமெரிக்காவில் ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

People
Image Credit: AP

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 756 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,23,400 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நேற்று ஒரேநாளில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு இதுவரை ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்பாக கடந்த 11 ஆம் தேதியன்று ஒரே நாளில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 11 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதே உச்சமாக இருந்தது.

கொரோனாவை கட்டுப்படுத்த பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தும் பணி அமெரிக்காவில் தீவிரமாக ஒருபுறம் நடைபெற்றுவந்தாலும் கொரோனா தொற்று பரவலின் வேகம் கட்டுக்குள் வராமல் இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே பிரிட்டனில் கொரோனா வைரசின் புதிய வகை ஒன்று பரவி வருவதால் அதனை அமெரிக்க சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்துவருகிறது. புதியவகை வைரஸ் அமெரிக்காவில் இதுவரை கண்டறியப்படவில்லை என அமெரிக்க தடுப்பூசி திட்டத்தின் தலைமை ஆலோசகர் மான்செய் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: பைடன் நிர்வாகத்தில் மேலும் ஒரு இந்தியருக்கு முக்கிய பொறுப்பு

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter