அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவேன்: ட்ரம்ப்

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால் நாட்டை விட்டே வெளியேறி விடுவேன் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், ட்ரம்பும், ஜோ பிடனும் போட்டிப்போட்டு கொண்டு வாக்குகளை சேகரித்துவருகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளி வாக்காளர்களின் ஓட்டு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. ஜோ பிடனுக்கே மக்கள் ஆதரவு அதிகமாக இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Trump’s

இந்நிலையில், பரப்புரை கூட்டத்தில் பேசிய அதிபர் ட்ரம்ப், “ஒருவேளை நான் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தால், என்ன நடக்கும் என்று கற்பனை செய்தீர்களா? வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒரு வேட்பாளருடன் தோற்றுவிட்டால் அப்புறம் எனது வாழ்க்கை வீண் என கருதி நாட்டைவிட்டு வெளியேறி விடுவேன். நான் இந்த உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரன். நான் நினைத்தால் அதிகமான பணத்தை தேர்தலுக்காக செலவு செய்து வெற்றிப்பெற முடியும். ஆனால் அப்படி ஒரு வெற்றி எனக்கு தேவையில்லை. அமெரிக்க அதிபர் வரலாற்றில் அதிபர் தோரணையில் சிறப்பாக நடந்து கொண்டதே நான் மட்டுமே. அமெரிக்காவை சிறப்பாக நிர்வகிக்கும் திறமை என்னிடமே உள்ளது. நானே அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படிக்கலாமே:  அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் ஒபாமா

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter