பயன்பாட்டுக்கு வந்தது கொரோனா தடுப்பூசி

pfizer vaccine

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி முதன்முறையாக போடப்பட்டிருப்பதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், அமெரிக்காவுக்கும் உலகிற்கும் வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளாஅர். அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்காவிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

அதன்படி 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க அந்நாட்டு சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

கோடை காலத்திற்கு 80சதவீதம் பேருக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் மாதத்துக்குள் 100 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPS employees move one of two shipping containers containing the first shipments of the Pfizer and BioNTech COVID-19 vaccine a ramp at UPS Worldport in Louisville, Kentucky, on December 13, 2020.

நியூயார்க்கின் லாங் தீவில் தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் செவிலியருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது.

அமெரிக்கா முழுவதும் இன்று முதல் 150 மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பைசரின் இந்த கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் பொதுமக்களின் மத்தியில் நம்பிக்கையை பெரும் என்றும் சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் கொரோனாவின் இரண்டாம் அலை வீசி வருகிறது. அங்கு ஒரு கோடியே 67 லட்சத்து 52 ஆயிரத்து 408 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் பைசர் தடுப்பூசிகளை நாடெங்கும் கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மிச்சிகனில் கிட்டங்கிலிருந்து பெரிய டிரக்குகளில் தடுப்பூசிகள் ஏற்றி அனுப்பப்பட்டன.

ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 275 வியால்கள் எனப்படும் ஊசி மருந்து குப்பிகள் மிச்சிகனிலிருந்து அமெரிக்காவின் 50 மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டுவருகிறது.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் காந்தி சிலை அவமதிப்பு

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter