அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்களுக்கு வீங்கிய மார்பு!

chest

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை.

இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

மேலும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் புதிய தடுப்பூசிக்கும் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் மாடர்னா, பைசர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சில பெண்களின் மார்பகங்கள் வீங்கியதால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடனடியாக மருத்துவர்களை நாடி, மார்பக பரிசோதனைகளையும் செய்து கொள்கின்றனர்.

Covid-19 vaccine

கொரோனா தடுப்பூசிகள் நிணநீர் மண்டலங்களில் வீக்கத்தை ஏற்படுத்தும் என அமெரிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மார்பகங்களில் கட்டிகளை ஏற்படுத்தும் எனவும், இருப்பினும் அவை புற்றுநோய் கட்டிகள் அல்ல எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்ட பின் 4 வாரங்களுக்கு மார்பகம் வீங்கினாலும் எந்த பரிசோதனையும் செய்ய வேண்டாம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

பொதுவாக காய்ச்சல், பெரியம்மைக்கான தடுப்பூசிகளை செலுத்தும்போதே நிணநீர் மண்டலங்கள் பெரிதாகுமென்றும், இது போடப்பட்ட தடுப்பூசி செயல்படுதற்கான அறிகுறி என்றும் மருத்துவ நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.

எனவே பெண்கள் அச்சப்பட வேண்டாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.