கொரோனாவுக்கு ஏப்ரல் மாதத்தில் மருந்து கிடைத்துவிடும்: ட்ரம்ப்

Trump

கொரோனாவுக்கு வரும் ஏப்ரல் மாதத்தில் மருந்து கிடைத்துவிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை.

இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த ஜனவரி மாதம் கண்டுபிடிக்கபட்ட வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதிகரித்துவரும் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. கடந்த ஒருவாரமாக அங்கு தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளுக்குப் பின் முதல் முறையாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பைசர் நிறுவனம் ஆய்வு செய்து வரும் கொரோனா தடுப்பு மருந்து குறித்து பேசினார். அப்போது, அமெரிக்க மக்களுக்கு வரும் ஏப்ரல் மாதத்தில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கிடைத்துவிடும் என நம்பிக்கை தெரிவித்தார். மருந்து சந்தைக்கு வந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே சுகாதார பணியாளர்கள், முதியவர்கள், கவலைக்கிடமாக இருப்பவர்களுக்கு முதலில் வழங்கப்படும் எனக் கூறினார். தடுப்பு மருந்துக்கான கண்டுபிடிப்பில் தமது அரசு முதலீடு செய்திருப்பதால், பொதுமக்களுக்கு இலவசமாகவே கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக அரிசோனா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், ஜோ பைடன் வெற்றிப் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து, அவருக்கு 306 தேர்வாளர்களின் வாக்கு கிடைத்துள்ளது. அதிபர் ட்ரம்புக்கு 232 தேர்வாளர்களின் வாக்குகள் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளது.

இதையும் படிக்கலாமே: அதிபர் தேர்தலில் முறைகேடு நடைபெறவில்லை: தேர்தல் அதிகாரிகள்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter