அமெரிக்க அரசியல் கட்சி சின்னத்தின் சுவாரஸ்யமும் பின்னணியும்…

democratic and republican symbols history

இந்தியாவை போலவே அமெரிக்காவிலும் கட்சிகளுக்கு சின்னங்கள் உண்டு, அவற்றுக்கு சுவாரசியமான பின்னணியும் உண்டு.

அமெரிக்காவில் குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் பிரதான கட்சிகளாக திகழ்கின்றன. இதில் குடியரசுக் கட்சிதான் மிகவும் பழமையானது. இதற்கு GRAND OLD PARTY என்ற பெயரும் உண்டு.

இக்கட்சியின் சின்னம் யானை. குடியரசுக்கட்சி தோன்றும் போது அதற்கென தனியாக எந்தச் சின்னமும் இல்லை. ஆனால் 1874ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிரபல கார்ட்டூனிஸ்ட் தாமஸ் நாஸ்ட் என்பவர் தான் வரைந்த படங்களில் குடியரசுக்கட்சியை குறிக்க யானை படத்தை வரைந்தார்.

இது மிகவும் பிரபலமாகி அது அக்கட்சியின் அதிகாரபூர்வ சின்னமாகவே மாறிவிட்டது.

How a Donkey and an Elephant Came to Represent Democrats and Republicans

ஜனநாயக கட்சிக்கு கழுதை சின்னம் கிடைத்த கதையும் சுவாரசியமானது. 1828ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஆண்ட்ரூ ஜான்சன் போட்டியிட்டார். ஜாக்சன் என்ற பெயரை சுருக்கி ஜாக்கிஸ் என எதிர்க்கட்சியினர் அழைத்தனர். ஜாக்கிஸ் என்றால் கழுதை என்று ஆங்கிலத்தில் பொருள் உண்டு. ஆனால் தன்னை கழுதை என கேலி செய்ததை தவறாக எடுத்துக்கொள்ளாத ஜாக்சன், தன் கட்சி பரப்புரை போஸ்டர்களில் கழுதை சின்னத்தை இடம் பெற செய்தார். இதன் பின் வந்த தேர்தல்களில் கழுதை ஜனநாயக கட்சியின் சின்னமாகவே மாறிப்போனது.

இது போல தற்போது குடியரசுக்கட்சியை குறிக்க சிவப்பு நிறத்தையும் ஜனநாயக கட்சியை குறிக்க நீல நிறத்தையும் பயன்படுத்தும் நடைமுறை கடந்த 20 ஆண்டுகளாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் உள்ள மாநிலங்களில் குடியரசுக்கட்சி வென்ற மாநிலங்களுக்கு சிவப்பு நிறத்தையும் ஜனநாயக கட்சி வென்ற மாநிலங்களுக்கு நீல நிறத்தையும் ஊடகங்கள் பயன்படுத்தின. இதன் பின் அக்கட்சிகளை குறிக்க அந்த நிறங்களையே பயன்படுத்துவது பொதுவான ஒரு விஷயமாகிவிட்டது. இப்போது கூட பரப்புரைகளில் ட்ரம்ப் சிவப்பு நிற டையையும் பைடன் நீல நிற டை அணிவதையும் காணலாம்.

இதையும் படிக்கலாமே:  எனக்கு பிடித்த உணவு இட்லி, சாம்பார் – கமலா ஹாரிஸ்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter