‘விழித்திடு அமெரிக்கா…. ஜோபிடன், கமலா ஹாரிஸ்க்கு வாக்களித்திடு’ இந்தியர்களை வைத்து வாக்கு சேகரிக்கும் ஜோபிடன்

Indians

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார்.

ஆனால் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடப்போவதில்லை என ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

மாறாக இணையவழி பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள ஜோ பிடன் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு கொரோனா விவகாரத்தை திறம்பட கையாளவில்லை, கறுப்பின மக்களுக்கு ட்ரம்ப் ஆட்சியில் பாதுகாப்பில்லை எனக் கூறி வாக்குகளை சேகரித்துவருகிறார்.

ஆனால் அமெரிக்க இந்தியர்கள் ஜோ பிடனுக்கு வாக்களிக்கப்போகிறார்களா? அல்லது அதிபர் ட்ரம்பிற்கே மீண்டும் வாக்களிக்கப்போகிறார்களா? என்பது மிகப்பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்கு இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் எனக்கூறப்படும் நிலையில் அதிபர் ட்ரம்பும், ஜோ பிடனும் இந்தியர்களின் வாக்கை குறி வைத்தே பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

india- america

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த வாக்காளர்களின் ஆதரவைப் பெறும் நோக்கத்தில்‌ டிஜிட்டல் விளம்பரங்களை ஜனநாயக கட்சி வெளியிட்டுள்ளது. இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸின் பின்புலத்தை பயன்படுத்தி இந்திய அமெரிக்‌கர்களின் வாக்குகளை பெரும் முயற்சியில் ஜனநாயக கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டிருக்கும் வீடியோவில்,‌ தமிழ், இந்தி உள்ளிட்ட‌ பல்வேறு மொழி பேசும் இந்தியர்கள், அனைவரின் எதிர்காலமும் சிறப்பாக அமைய வ‌‌ருகிற அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கும், கமலா ஹாரிஸ்க்கும் வாக்களியுங்கள் என பரப்புரை செய்கின்றனர். ‘விழித்திடு அமெரிக்கா…. ஜோபிடன் கமலா ஹாரிஸ்க்கு வாக்களித்திடு’ என்பது போன்ற வாசகங்களும் 14 இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் படிக்கலாமே: ட்ரம்ப்பை தோற்கடியுங்கள் என கோஷம்!

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa