வால்ட் டிஸ்னி பூங்காக்கள் ஜூன் 4இல் திறப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள வால்ட் டிஸ்னி அவென்ஞ்சர்ஸ் பூங்காக்கள் வரும் ஜூன் மாதம் 4 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.

உலகின் பிரபலமான பொழுதுபோக்கு பூங்காவான வால்ட் டிஸ்னி பூங்காக்கள் கலிபோர்னியா, ஃபுளோரிடா, பாரீஸ், டோக்கியோ, ஹாங்காங் மற்றும் ஷாங்காய் ஆகிய ஆறுநகரங்களில் செயல்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்றால் இவை அனைத்தும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டன. அதன்பின் கொரோனா பரவல் கொஞ்சம் தணிந்ததையடுத்து ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டன.

ஆனால் கொரோனா பரவல் மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்ததால் உடனடியாக மூடப்பட்டது.

இந்த சூழலில் புதிய மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அவென்ஞ்சர்ஸ் பூங்கா இயக்குநர் ஜோஷ் டிஅம்ரோ தெரிவித்துள்ளார்.

Avengers Campus at Disney California Adventure Park Set to Open June 4 -  MiceChat

அதன்படி ஜூன் மாதம் 4 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பூங்காவினுள் அனுமதிக்கப்படுகின்றனர்.

உடல்வெப்பநிலை பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைபிடித்தல் அவசியம் என வால்ட் டிஸ்னி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் அமெரிக்காவில் மட்டும் இதுவரை 3 கோடியே 17 லட்சத்து 34,000 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கேளிக்கை பூங்காவை திருந்திருப்பது சுகாதார நிபுணர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது நோய் பரவலை அதிகப்படுத்தலாம் என்றும் அஞ்சப்படுகிறது.