ட்ரம்புக்கு பெரும் பின்னடைவு: சொந்த கட்சியினரே எதிராக வாக்களிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

துணை அதிபராக கமலாஹாரிஸ் தேர்வானார். இவர்கள் இருவரும் வரும் 20 ஆம் தேதி முறைப்படி பதவியேற்கவிருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

இதனிடையே பைடனின் வெற்றியை உறுதி செய்யும்பொருட்டு கடந்த 9 ஆம் தேதி தேர்தல் சபை தேர்வாளர்கள் அளித்த வாக்குகள் நாடாளுமன்றத்தில் எண்ணப்பட்டு, பைடனின் வெற்றியை அங்கீகரித்து சான்றிதழ் அளிக்கு நிகழ்வு நடந்தது.

அப்போது, நாடாளுமன்றத்தின் அருகே திரண்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர்.

Trump
Image Credit: CNN

இதனால், ஏற்பட்ட கலவரத்தில் ஒரு பெண், ஒரு போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 6பேர் உயிரிழந்தனர்.

உலகையே அதிரவைத்த இந்த நாடாளுமன்ற வன்முறைக்கு ட்விட்டரில் ட்ரம்ப் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட கருத்துகளே காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வன்முறையை தூண்டிய நபர் அதிபர் பதவியில் தொடரக்கூடாது என அவருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது ட்ரம்பின் பதவிநீக்கம் தொடர்பான வாக்கெடுப்பிற்கு 232 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 197 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளார். இதனால் அமெரிக்க வரலாற்றிலேயே இரண்டு முறை பதவிநீக்க தீர்மானத்தை எதிர்கொண்ட ஒரே அதிபராக ட்ரம்ப் மாறியுள்ளார். அவருக்கு எதிராக சுமார் 10 பேர் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் ட்ரம்புக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

இருப்பினும் செனட் சபை உறுப்பினர்களும் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன்படி செனட் சபை கூட்டமானது வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையும் படிக்கலாமே: நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட ட்ரம்ப் ஆதரவாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter