ஜோ பிடன் அமெரிக்காவையே அழிக்க திட்டமிட்டவர் – அதிபர் ட்ரம்ப்

சீனா, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணத்தடை விதித்ததற்கு ஜோ பிடன் எதிர்ப்புத் தெரிவித்ததாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் களமிறங்கியுள்ள டொனால்டு ட்ரம்ப், பரப்புரையில் தீவிரமாக பங்கேற்றுள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய அவர், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடனை கடுமையாக சாடினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சீனா, ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க அரசு பயணத்தடை விதித்தபோது, ஜோ பிடன் எதிர்த்ததாக ட்ரம்ப் குற்றம்சாட்டினார். வைரஸை தடுக்க அமெரிக்க அரசு பயணத்தடை விதித்த நிலையில், ஜோ பிடன் அமெரிக்காவையே அழிக்க திட்டமிட்டதாக குற்றம் சுமத்தினார். மேலும், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு குறித்தும் ட்ரம்ப் பேசினார். ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சி 4ஆவது மற்றும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் பெருமையுடன் கூறினார். மேலும், அந்த தடுப்பூசியின் பரிசோதனைக்கு பொதுமக்கள் தன்னார்வத்துடன் முன்வருமாறும் ட்ரம்ப் கேட்டுக் கொண்டார். அதிபர் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படும் என்றும், முதலில் அமெரிக்காவில் வசிக்கும் முன்களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு செலுத்தப்படும் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே: நான் வெற்றி பெற்றால் எச் 1பி விசா குறித்த இந்தியர்களின் கவலைகள் நீங்கும் – ஜோ பிடன்

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa