அதிபர் ட்ரம்பால், அவரது மருமகளுக்கு நேர்ந்த கொடுமை!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மூத்த மகனின் காதலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது மகனும், மகனின் காதலியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார். ஆனால் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடப்போவதில்லை என ஜோ பிடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மூத்த மகனுடன் டேட்டிங் செய்யும் முன்னாள் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி பிரபலமான கிம்பர்லி கில்ஃபோயில், தனது மாமனார் அதாவது ட்ரம்பின் பரப்புரை பேச்சு மற்றும் ரஷ்மோர் மவுண்டில் வானவேடிக்கை கொண்டாட்டத்தை பார்க்க தெற்கு டகோட்டாவுக்குச் சென்றிருந்தார். அதன்பின் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 51 வயதான கில்ஃபோயிலுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

Trump Son

இதுகுறித்து ட்ரம்ப் பிரச்சாரத்தின் நிதிக் குழுவின் ஊழியர்களின் தலைவரான செர்ஜியோ கோர் வெளியிட்ட அறிக்கையில், கில்ஃபோயில் நன்றாக இருக்கிறார், மேலும் அவருக்கு அறிகுறியில்லாமல் தொற்று கண்டரியப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து ட்ரம்பின் மூத்த மகனுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முன்னதாக ட்ரம்பின் தனிப்பட்ட பணியாளர் மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதியின் பத்திரிகை செயலாளர் ஆகிய இருவருக்கு கொரேனா உறுதியானது.